தேமுதிக வேட்பாளர் மதிவாணனை ஆதரித்து பிரேமலதா பிரச்சாரம் !

325

முதலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குசேகரித்தது திமுக தான் என்று தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டை பகுதியில், தேமுதிக வேட்பாளர் மதிவாணனை ஆதரித்து அக்கட்சியின் மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, பணம் பட்டுவாடா செய்தவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதை குறிப்பிட்ட அவர், அப்படி என்றால், முதலில் திமுகவை தான் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார். முதலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குசேகரித்தது திமுக தான் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.