ஆறுகள், கால்வாய்கள் தூர் வாரப்படவில்லை – பி.ஆர்.பாண்டியன்

300

ஆறுகள், கால்வாய்கள் தூர் வாரப்படாததால், பாசன பகுதிக்கு காவேரி நீர் இன்னும் வரவில்லை என்று பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில், சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும், ஆந்திர அரசு புதிய அணைகள் கட்டுவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர்.பாண்டியன், காவேரியில் திறக்கப்பட்ட தண்ணீர் கடை மடை, நடு மடை, முதல் மடை உள்ளிட்ட எந்த பகுதிக்கும் வரவில்லை என்று தெரிவித்தார்.