தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க முன்வந்த தமிழகஅரசு, வறட்சி நிவாரண நிதியை கூடுதலாக வழங்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

77

மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வறட்சி நிவாரணமாக அறிவித்ததை சுட்டிக் காட்டினார். தற்போது அறிவித்துள்ள நிதியுவி போதுமானதாக இல்லை என்று கூறிய அவர், கூடுதல் நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்தார்.