வெற்றி பெற்றால் மக்களுக்கு நல்லது செய்வேன்..!

422

தென்சென்னை தொகுதியில் உள்ள பதினெட்டு லட்சம் மக்களில் ஏழு லட்சம் பேர் தனக்கு ஆதரவு கொடுப்பதாக, திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியுள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற தனியார் சினிமா நிறுவனத்தின் திறப்பு விழாவில், திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பவர் ஸ்டார் சீனிவாசன், இனிமேல் தனது அரசியல் பயணம் தொடரும் என்றும், அரசியலில் எத்தனை அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் வந்தாலும், சந்திக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். தென்சென்னை தொகுதியில் ஏழு லட்சம் மக்களின் ஆதரவு தனக்குள்ளதாக தெரிவித்த அவர், தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களுக்கு நல்லது செய்வேன் எனவும் உறுதி அளித்தார்.