தமிழகத்தில் நிலக்கரி கையிருப்பு குறைவு : தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு

279

தென் மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின் வெட்டு இருப்பதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

வட சென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது மற்றும் பராமரிப்பு பணி காரணமாக ஆயிரத்து 410 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மின்சார உற்பத்திக்கான நிலக்கரி கையிருப்பு தமிழகத்தில் குறைவாக இருப்பதால், 3 மின் நிலையங்களில் தற்காலிகமாக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால், தமிழகம் முழுவதும் பரவலாக அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிலும் தென் மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின் வெட்டுகள் உள்ளன.

மதுரை மற்றும், நெல்லை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 3 மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். மின்துண்டிப்பால் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அதிலும் வெப்ப நிலை பகல் நேரங்களில் 37 டிகிரி செல்சியஸாக கொளுத்துவதால், இரவிலோ மின்சாரம் இல்லாமல் மக்கள் தூங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். .இதே போல் வேலூர், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்ட பொதுமக்களும், மின்வெட்டு புகார் கூறியுள்ளனர்.