பொது சிவில் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த ஆதரவு கேட்டு அரசியல் கட்சித் தலைவர்களை இஸ்லாமிய அமைப்பினர் சந்தித்து பேசினர்.

185

பொது சிவில் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த ஆதரவு கேட்டு அரசியல் கட்சித் தலைவர்களை இஸ்லாமிய அமைப்பினர் சந்தித்து பேசினர்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
இதேபோன்று, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை, இந்திய யூனியன் முஸ்லீம் கட்சித் தலைவர் காதர் மொய்தீன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பதாக கூறினார்.