கடும் சர்ச்சைக்கு இடையே நடைபெற்ற அஞ்சலக தேர்வு..!

120

கிராம அஞ்சலக ஊழியர்களுக்கான தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது.

அஞ்சலகங்களில் இருக்கக் கூடிய தபால் காரர், அஞ்சலக உதவியாளர், அஞ்சல் அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நாடுமுழுவதும் நடைபெற்றது.தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய 4 இடங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.150 மதிப்பெண்களுக்கான இந்த தேர்வு 3 மணிநேரம் நடைபெற்றது.இந்நிலையில் கடந்த காலங்களில் ஆங்கிலம்,தமிழ்,ஹிந்தி மொழிகளில் நடைபெற்ற அஞ்சலக தேர்வு தற்போது தமிழ் நீக்கப்பட்டு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டும் நடைபெற்றது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.