அஞ்சலக வங்கி சேவை: லோகா வடிவமைக்க அஞ்சல்துறை அழைப்பு!

5573

சென்னை,ஜூலை.18–
அஞ்சலக வங்கி சேவைக்கான இலச்சினையை (லோகோ) வடிவமைக்க பொதுமக்களுக்கு அஞ்சல்துறை அழைப்பு விடுத்துள்ளது.
வங்கிகளுக்கு இணையாக இந்திய அஞ்சலக சேமிப்பு வங்கி சேவையை அடுத்த ஆண்டு தொடங்குவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், இலச்சினை வடிவமைக்க பொது மக்களுக்கு வாய்ப்பளித்து, சிறந்த இலச்சினைக்கு பரிசுத் தொகையும் அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
நிபந்தனைகளின்பேரில், “இலச்சினை வடிவமைப்பு’ (லோகோ), “இணைப்பு சொற்கள்’ ஆகியவற்றை கற்பனைவளத்துகேற்றார் போல் வடிவமைத்து ஜூலை 31-க்குள் அனுப்ப வேண்டும்.
சிறந்த இலச்சினைக்கும், இணைப்பு சொற்களுக்கும் தலா ரூ.25 ஆயிரம் என இரு பரிசுகள் வழங்கப்படும்.
கூடுதல் விவரங்களை, www.indiapost.gov.in எனும் இணையதளத்தில் அறியலாம். பலரும் படைப்புகளை அனுப்பி வருகிறார்கள் என்றனர்.