ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி போராட்டம் , 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடையடைப்பு.

87

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, மதுரை மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டின்போது, காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால், 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகத்தில் அரசியல் கட்சியினர், மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதே கோரிக்கையை முன்வைத்து, மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
வெள்ளலூரை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் அந்தப் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.