பாலியல் புகார்களை விசாரிக்க புதிய விதி – போப் ஆண்டவர் அறிவிப்பு

264

கத்தோலிக்க தேவாலய பாதிரியார்கள், கன்னியாஸ்திரீகள் உள்ளிட்டோருக்கு, பாலியல் புகார்களை விசாரிக்க புதிய விதிகளை போப் ஆண்டவர் புனித பிரான்சிஸ் அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறித்துவ ஆலயங்களுக்கான இந்த விதிகளின்படி, 2020ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதிக்குள், பாலியல் புகார்கள் குறித்த ஒரு பொது புகார் மையம் உருவாக்கப்பட வேண்டும் என்று போப் வலியுறுத்தியுள்ளார்.

இதில் பதிவாகும் பாலியல் புகார்கள் குறித்த விசாரணை 90 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும், பாலியல் புகார்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் இந்த விதிகள் கூறுகின்றன.

இந்த விதிகளை மீறுவோருக்கு என்ன தண்டனை என்றும் போப்பின் அறிக்கையில் குறிப்பிடவில்லை. பாலியல் புகார்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் கடந்த பிப்ரவரி மாதம் உறுதிபட பேசியிருந்தார்.