பூந்தமல்லியில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாயின.

169

பூந்தமல்லியில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாயின.
பூந்தமல்லி அடுத்த எட்டியம்மன் கோவில் தெருவில் துளசிராம் என்பவருக்கு சொந்தமான கம்ப்யூட்டர் உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனம் இயங்கிவருகிறது. இந்த நிலையில், இரவு ஊழியர்கள் வழக்கம்போல் நிறுவனத்தை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். அதிகாலையில், கம்பெனிக்குள் இருந்து திடீரென அதிகளவில் புகை வெளிவர தொடங்கியதால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கொழுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதில், 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமடைந்தன.

இதேபோல், பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதில், ஏசி, கம்ப்யூட்டர்கள் உள்பட 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாயின. இந்த இரு தீ விபத்துகள் குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.