சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவரின் 303-வது பிறந்தநாள் கொண்டாட்டம்..!

499

திருநெல்வேலியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவரின் அரண்மனையை பராமரித்து சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும் என அவரது வாரிசுகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆங்கிலேயரை எதிர்த்து முழக்கமிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவரின் 303வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி பூலித்தேவரின் வாரிசான கோமதிமுத்துராணி தலைமையில் பால்குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பூலித்தேவரின் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பல்வேறு சமுதாய அமைப்புகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் என பல்வேறுதரப்பினரும் இங்கு வந்து பூலித்தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் தலைமையில் நடைபெற்று வருகிறது.