முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி சிவகங்கை கண்ணுடைய அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

310

முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி சிவகங்கை கண்ணுடைய அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாக பூரண குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற அம்மனின் தேர்பவனியில் கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன், நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் ஆகியோர் பங்கேற்று தேரை இழுத்துச்சென்றனர். விழாவில், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்