தனியார் பள்ளிகளை மூட ஸ்டாலின் தயாரா? – பொன்.ராதாகிருஷ்ணன் சவால்

160

தமிழகத்தில் அரசு பள்ளிகள் மூடும் நிலைக்கு, திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளே காரணம் என்றும், இதனை மூட மு.க.ஸ்டாலின் தயாரா என பொன்.ராதாகிருஷ்ணன் சவால் விடுத்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில், ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் அரசு பள்ளிகள் மூடுவதற்கு திமுக தான் காரணம் என்றார். திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளால் தான், அரசு பள்ளிகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இல.கணேசன், கர்நாடகாவில் பொம்மலாட்டம் நடத்தி காங்கிரஸ் ஆட்சியை பிடித்தாக குற்றச்சாட்டினார். இந்த விவகாரத்தில் முதல் குற்றவாளி ராகுல்காந்தி தான் என்று அவர் குறிப்பிட்டார். புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியிருப்பது பெரியதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என்றார். தமிழகத்தில் பலர் குழப்பவாதிகளாக இருக்கும்போது அவர் மட்டும் விதிவிலக்கில்லை என இல.கணேசன் கூறினார்.