தமிழகத்தில் பாலில் மட்டுமல்ல, அரசாங்கத்திலும் கலப்படம் இருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்..

328

தமிழகத்தில் பாலில் மட்டுமல்ல, அரசாங்கத்திலும் கலப்படம் இருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், குட்கா விற்பனைக்கு அமைச்சர் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகார் குறித்து தமிழக அரசு முழுமையாக விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். தமிழகத்தில் பாலில் மட்டும் அல்ல, அரசாங்கத்திலும் கலப்படம் இருப்பதாக குற்றம்சாட்டிய பொன்.ராதாகிருஷ்ணன், கலப்படத்தில் ஈடுபட்ட நிறுவனங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.