உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற தொண்டர்கள் உழைக்க வேண்டும் -மத்திய இணையமைச்சர் பொன்ராதா கிருஷ்ணன்..!

298

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் இடைவெளியில் பாரதிய ஜனதா கட்சி பெரிய வரவேற்பு பெற்றுள்ளதாக, மத்திய இணையமைச்சர் பொன்ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டம் அரூரில் பாஜக அலுவலகத்தை பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் இடைவெளியில், பாஜக பெரிய வரவேற்பை பெற்றுள்ளதாக கூறினார். மேலும் வரும் உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற, தொண்டர்கள் உற்சாகமாக பணியாற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.