எட்டு வழிச்சாலை திட்டம் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் – பொன். ராதாகிருஷ்ணன்

267

தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படுவதாக, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டி உள்ளார்.

ஜிஎஸ்டி வரி குறித்த கருத்தரங்கு கோவையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பொன். ராதாகிருஷ்ணன், தமிழகத்தின் வளர்ச்சியில் 70 சதவீதம் மேற்கு மாவட்டங்களில் இருந்து பெறப்படுவதாக கூறினார். வட கோவை ரெயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்த பொன். ராதாகிருஷ்ணன், வளர்ச்சியை தடுக்க எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ், தென் இந்தியாவில் காங்கிரஸ் மாயமாகி விட்டதாக விமர்சித்தார். தென்னிந்தியாவில் பாஜக வலுவாக காலூன்றி வருவதாக தெரிவித்த அவர், தமிழகம் மற்றும் தமிழக மக்களுடன் நெருக்கமான உறவை பிரதமர் மோடி பேணி வருவதாக கூறினார்.