தமிழகத்தில் புறவாசல் வழியாக நுழையும் எண்ணம் இல்லை : பொன் ராதாகிருஷ்ணன்

226

தமிழகத்தில் புறவாசல் வழியாக நுழையும் எண்ணம் இல்லை என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வறட்சி காரணமாக உயிரிழந்த விவசாயிகள் எத்தனை பேர் என்பதை அரசு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
விவசாயிகளுக்கான மத்திய அரசின் பயிர்க்கடன் உள்ளிட்ட திட்டங்களை, அணைத்து மாவட்டங்களிலும் நடைமுறைபடுத்தி இருந்தாலே தமிழகத்தில் இவ்வளவு பெரிய விவசாய இழப்பு ஏற்பட்டு இருக்காது என்று பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.மேலும் அதிமுக மூன்றாக பிளவுபட்டுள்ளதால் திமுக ஆதாயம் தேடப்பார்க்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.