சட்டத்திற்கு உட்பட்டு ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்று அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

82

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைப்பதால் உதய் மின்திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக கூறினார். ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார். அவ்வாறு அவசர சட்டம் கொண்டு வந்து பின் லோக்சபாவில் சட்டமாக்கிக் கொள்ளலாம் என குறிப்பிட்ட அவர், இந்த அவசர சட்டத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடாது என்றும் அவர் கூறினார். இருப்பினும், சட்டத்திற்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று பொன்னையன் தெரிவித்தார்.