தமிழகம் முழுவதும் சமத்துவ பொங்கல் விழா | பள்ளி , கல்லூரி வளாகம் முழுவதும் பொங்கலோ பொங்கல் முழக்கம்

80

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள, பள்ளி கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

தமிழர் திருநாளின் சிறப்புகளை உணர்த்து வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. உழவர்களுக்கு தோழனாய் இருக்கும் மாடுகளை வணங்கியும் மாடுகளுக்கு மாலை அணிவித்தும் மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர். சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில், மாணவ-மாணவிகள் புத்தாடை அணிந்து மண் பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர். மேலும்,நடனமாடியும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அரியலூர் மாவட்டம் சோழன்குடிக்காடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பொங்கல் பண்டிகையையொட்டி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. pongal

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் பரிசுகளை வழங்கி பாராட்டினர். நெல்லை மாவட்டம் கே.டி.சி நகரில் உள்ள தனியார் கல்லூரி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. மாணவர்கள் வேஷ்டியும், மாணவிகள் சேலையும் அணிந்திருந்தனர். மேலும், கல்லூரி வளாகத்தில் பொங்கல் பானை வைத்து மாணவிகள் பொங்கலிட்டனர். இதனையடுத்து மங்கள இசை முழங்க ஆட்டம் பாட்டத்துடன் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது