பொங்கல் திருநாளை முன்னிட்டு, 3 ஆயிரத்து 186 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் ரொக்கத் தொகை

121

பொங்கல் திருநாளை முன்னிட்டு, 3 ஆயிரத்து 186 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் ரொக்கத் தொகை வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் ஆயுதப்படையில் ஹவில்தார் நிலைகளில் பணிபுரியும் பொங்கல் திருநாளை முன்னிட்டு காவல்துறையில் உள்ள காவலர், தலைமைக் காவலர் என 3 ஆயிரம் பணியாளர்களுக்கு காவல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் உள்ள முன்னணி தீயணைப்போர், ஓட்டுனர் கம்மியர், ஓட்டுனர் தீயணைப்போர் மற்றும் தீயணைப்போர் ஆகிய நிலைகளில் உள்ள 120 அலுவலர்களுக்கும் சிறப்பு பணிப்பதக்கங்கள் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.இதேபோல், சிறைத்துறையில் முதுநிலை மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள், 60 பணியாளர்களுக்கும் முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள் வழக்க ஆணையிட்டுள்ளதாகவும்,பதக்கங்களை பெறும் காவல்துறை, தீயணைப்புத்தறை, சிறைத்துறையினருக்கு. பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் மாதந்திர படியாக தலா 400 ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வானொலி பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள், நாய் படை பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 பேர் வீதம் மொத்தம் 6 அதிகாரிகளுக்கு சிறப்பு பணிப்பதக்கம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த பதக்கங்கள் பெறும் காவலர் மற்றும் தலைமைக் காவலருக்கு ரொக்க தொகையாக 4 ஆயிரம் ரூபாயும், சார்பு ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் நிலையில் உள்ள அதிகாரிகளுக்கு 6 ஆயிரம் ரூபாயும், காவல்துணை கண்காணிப்பாளர் நிலையில் உள்ளவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் விடுத்துள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.