கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

97

கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டு, தசரா பண்டிகையில் ஒரு நாள் கூடுதலாக சேர்க்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பிற்கு தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து, கட்டாய விடுமுறைப் பட்டியலில் பொங்கல் பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தசரா விடுமுறைக்கு பதிலாக பொங்கல் பண்டிகை பட்டியலில் சேர்க்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, விளக்கம் அளித்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கூறுகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை 2-வது சனிக்கிழமை வருவதை சுட்டிக் காட்டினார். 2-வது சனிக்கிழமை மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை நாள் என்பதால் ஒருங்கிணைப்பு கமிட்டி அந்த நாளை விடுமுறை நாளாக தேர்வு செய்யாமல், மற்றொரு நாளில் விடுமுறை எடுத்துக் கொள்ள ஊழியர் சங்கம் முடிவு செய்தாக குறிப்பிட்டார். உண்மை நிலையை உணராமல் மத்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக கூறி மக்களை திசைத் திருப்பும் முயற்சியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டது வருத்தம் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.