பொங்கல் பண்டிகையை முன்னிட்டு |இளைவட்டக்கல் தூக்கும் போட்டிக்காக இளைஞர்கள் பயிற்சி

148

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பணகுடி அருகே பாரம்பரிய விளையாட்டான இளவட்டக்கல் தூக்கும் போட்டிக்காக இளைஞர்கள் தயாராகி வருகின்றனர்…

நெல்லை மாவட்டம் பணகுடியில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையன்று பாரம்பரிய வீரவிளையாட்டான இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடத்தபட்டு வருகிறது.. இந்நிலையில் நடப்பாண்டுக்கான பொங்கல் விழாவிற்கு இன்னும் ஓரிரு வாரங்களே உள்ள நிலையில், இளவட்டக்கல் தூக்கும் போட்டிக்காக இளைஞர்கள் தற்போது பயிற்சி எடுத்து வருகின்றனர்.. இளைஞர்களுக்கு இணையாக பெண்களும் உரலை தூக்கு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்…