பொங்கல் பண்டிகையையொட்டி வேலூர் அருகே நடைபெற்ற எருதுவிடும் போட்டியில் சுமார் 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன..!

292

பொங்கல் பண்டிகையையொட்டி வேலூர் அருகே நடைபெற்ற எருதுவிடும் போட்டியில் சுமார் 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
வாணியம்பாடி அடுத்த வெள்ளைக்குட்டை கிராமத்தில் நடைபெற்ற இந்த விழாவை திருப்பத்தூர் சார் ஆட்சியர் கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், மிட்டூர், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சிறிப்பாய்ந்தன. காளையை பிடிக்க முயன்றதில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர். வேலூர் மாவட்டம் அமிர்தி அருகே உள்ள கீழ் அரசம்பட்டு கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் சீறிப்பாய்ந்தன. இதனை பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.