தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகை சிறப்புப்பேருந்துகள் இன்று முதல் இயக்கம்….

110

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 17 ஆயிரத்து 693 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியூர் செல்லும் பயணிகளுக்கு 11, 12, 13 ஆகிய 3 நாட்களில் அண்ணாநகர், தாம்பரம் சானடோரியம், பூவிருந்தவல்லி, அடையாறு, கோயம்பேடு ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 250 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இன்றுமுதல் இயக்கப்படும் எனவும்,
யம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இன்றுமுதல் கூடுதலாக 794 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்ல இதுவரை 94 ஆயிரத்து 156 பேரும்,
பிற பகுதிகளில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்ல 28 ஆயிரத்து 710 பேரும் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.