பொங்கல் பொருட்கள் விற்பனை படுஜோர் | விவசாயிகள் நேரடி விற்பனை

107

கும்பகோணம் மார்க்கெட்டில் கரும்பு, வாழை, மஞ்சள் உள்ளிட்ட பொங்கல் பொருட்களின் விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை பயிர்கள் கஜா புயலால் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, பொங்கல் பண்டிகைக்காக திருச்சி, பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாழைத் தார்கரை வரவழைத்து, விற்பனை செய்யப்படுகிறது. சாதாரணமாக ஒரு வாழைத் தார் 100ரூபாயில் இருந்து 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவது வழக்கம். ஆனால் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படுவதால் ஒரு வாழைத் தார் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

இதேபோன்று சுவாமி மாலை, திருச்சேரை, திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் விளைந்த கரும்பு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும் இஞ்சி, மஞ்சள், பரங்கிக்கய், பூசணிக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் விற்பனையும் படு ஜோராக நடைபெற்றது. விவசாயிகள் நேரடி விற்பனையில் ஈடுபட்டனர். பொங்கல் பொருட்களை வாங்க கூட்டம் அலைமோதியது.