தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு பொங்கல் போனஸ் வழங்க முதலமைச்சர் பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

97

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்றும், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 500 ரூபாய் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதேபோன்று, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுவர்களுக்கு ஆயிரம் ரூபாயும், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு 500 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். பொங்கல் போனஸ் வழங்கப்படுவதன் மூலம் அரசுக்கு 325 கோடியே 50 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.