புதுச்சேரியில் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு உற்சாக வரவேற்பு..!

255

புதுச்சேரி வந்த குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு கிரண்பேடி, நாராயணசாமி உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு இன்று புதுச்சேரி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு மாநில அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, முன்னாள் முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் வெங்கய்யா நாயுடுவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனையடுத்து புதுவைப் பல்கலைக்கழகம் செல்லும் அவர், மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

மேலும், பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா, நீச்சல் குளம் மற்றும் மகளிர் விடுதிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் வெங்கய்யா பங்கேற்கிறார். குடியரசு துணைத் தலைவர் வருகையை யொட்டி, புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.