121 பெண்கள் பங்கேற்கும் 36 மணி நேர யோகா கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..!

271

121 பெண்கள் பங்கேற்கும் 36 மணி நேர யோகா கின்னஸ் சாதனை நிகழ்ச்சியை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

சர்வதேச யோகா தினத்தை யொட்டி புதுச்சேரி இந்திராகாந்தி உள் விளையாட்டு அரங்கில் 36 மணி நேர தொடர் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 121 பெண்கள் பங்கேற்கும் கின்னாஸ் சாதனை நிகழ்ச்சியை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். யோகாவில் 18 வயது முதல் 72 வயது வரை உள்ள பெண்கள் பங்கேற்கின்றனர். இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய யோகா சாதனை நிகழ்ச்சி நாளை இரவு 7 மணி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. பொதுமக்களிடம் உடல், மன ஆரோக்கியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நிறைவு விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பங்கேற்கிறார்.