புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை – புதுச்சேரி

173

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுடன் கலந்து ஆலோசித்தாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி தலைமை செயலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கடந்த 7 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் புதுச்சேரியில் நடத்தபடாமல் இருந்ததாக தெரிவித்தார். இந்தநிலையில் 4 வாரத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், மீண்டும் தேர்தல் நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுடன் கலந்து ஆலோசித்தாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், கட்சி தலைவர்கள் தலைமையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது சம்மந்தமாக கருத்து கேட்கும் கூட்டம் நடைபெறும் என்று நாராயணசாமி கூறினார்.