பெண் டிஜிபியாக பதவியேற்றார் சுந்தரி நந்தா..!

469

புதுச்சேரி முதல் பெண் டிஜிபி-யாக சுந்தரி நந்தா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

புதுச்சேரி மாநில டிஜிபியாக பணியாற்றி வந்த சுனில்குமார் கௌதம், டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, டெல்லி காவல்துறையில் பணியாற்றிய சுந்தரி நந்தாவை, புதுச்சேரி டிஜிபியாக மத்திய உள்துறை அமைச்சகம் நியமனம் செய்து உத்தரவிட்டது. இந்தநிலையில், புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் அவர் இன்று பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம் புதுச்சேரி முதல் பெண் டிஜிபி என்ற பெருமையை சுந்தரி நந்தா பெற்றார். பதவியேற்பு விழாவில், காவல்துறை உயர் அதிகாரிகள், அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். புதுசேரியில் பதவியேற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், சட்டம், ஒழுங்கை பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் சுந்தரி நந்தா தெரிவித்தார்.