2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல்..!

173

புதுச்சேரி சட்டசபையில் இந்தாண்டுக்கான முழு பட்ஜெட்டை முதலமைச்சர் நாராயணசாமி இன்று தாக்கல் செய்கிறார்.

புதுச்சேரி மாநிலத்தில் ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட்டும், ஜூன், ஜூலை மாத இறுதியில் முழு பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், புதுச்சேரி மாநில சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. இதனைத்தொடர்ந்து, நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் நாராயணசாமி 2018-19 ஆம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதையடுத்து, துறை ரீதியான விவாதங்கள் நடைபெறவுள்ளன.

நிதி நெருக்கடி, இலவச அரிசி விவகாரம், சென்டாக் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. முன்னதாக பட்ஜெட் குறித்து முதலமைச்சர் அலுவலகத்தில் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பட்ஜெட் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.