அரசு மீது களங்கம் ஏற்படுத்த ஆளுநர் முயற்சி செய்கிறார் : நாராயணசாமி புகார்.

249

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவ கலந்தாய்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஆளுநர் கிரண்பேடி அரசு மீது களங்கம் ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினார். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர், சென்டாக் கலந்தாய்வில் பங்கேற்ற அதிகாரிகள் மீது வீண் பழி சுமத்துவதாக கூறினார். துணை நிலை ஆளுநராக இருக்க கிரண்பேடிக்கு தகுதியில்லை என விமர்சித்த நாராயணசாமி, அரசுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கும் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக தெரிவித்தார்.