புதுச்சேரியில் நடைபெற்ற பாய்மர படகு போட்டியினை முதல்வர் நாராயணசாமி, பிரான்ஸ் நாட்டு துணை தூதர் கோத்தரின் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்..!

550

புதுச்சேரியில் நடைபெற்ற பாய்மர படகு போட்டிகள் ஏராளமான வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக பிரான்ஸ் அரசுடன் இணைந்து பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக பாய்மர படகு போட்டிகள் நடைபெற்றது. போட்டியினை முதல்வர் நாராயணசாமி, பிரான்ஸ் நாட்டு துணை தூதர் கோத்தரின் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். இப்போட்டியில் அமெரிக்கா, பிரான்ஸ், ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு 28-ந் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.