காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த திமுகவிற்கு உரிமை கிடையாது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

170

காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த திமுகவிற்கு உரிமை கிடையாது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் ஜெயலலிதா, குணமடைந்து வருவது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், காவிரி விவகாரத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தமிழகத்திற்கு துரோகம் இழைத்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார். இதுகுறித்து திமுக, காங்கிரஸ் கட்சிகள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள பொன்.ராதாகிருஷ்ணன், காவிரி பிரச்சனையில் இருமாநில விவசாயிகளுக்கும் பிரச்சனை இல்லாத வகையில் மத்திய அரசு முடிவெடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.