தமிழகத்தில் இந்து இயக்கத்தினர் மீது தாக்குதலில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

225

தமிழகத்தில் இந்து இயக்கத்தினர் மீது தாக்குதலில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
கோவையில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் இல்லத்திற்கு, நேரில் சென்ற அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் இந்து இயக்கத்தினர் மீது நடத்தப்படும் தாக்குதல் சமீப காலமாக அதிகரித்து இருப்பதாக கூறினார். அவ்வாறு தாக்குதலில் ஈடுபடுவோரை கைது செய்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.