ஊடகங்களில் பயங்கரவாதிகள் ஊடுருவி விட்டதாக யூகத்தின் அடிப்படையிலேயே கருத்து கூறினேன் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை 50 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது, விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் என தெரிவித்தார். டீசல் விலை உயர்வுக்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறிய அவர், விலையை தனியார் அமைப்பு நிர்ணயம் செய்வதாக தெரிவித்தார். தூத்துக்குடி மக்கள் மூலைச்சலவை செய்யப்பட்டதாக கூறிய அவர், காவல்துறை பயங்கரவாதத்தை அடக்க வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ஊடகங்களில் பயங்கரவாதிகள் ஊடுருவி விட்டதாக ஒரு சிலரின் செயல்பாடுகளை வைத்து யூகத்தின் அடிப்படையிலே கருத்து கூறியதாக விளக்கமளித்தார்.