ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் – மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

170

ஜிஎஸ்டி மூலம் மற்ற நாடுகளை விட இந்தியா சாதனை படைத்து வருவதாக மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்ததை யொட்டி சென்னை சேத்துப்பட்டில் ஜி.எஸ்டி தினம் கொண்டாடப்பட்டது. இதில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யும் போது, பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டதாக குறிப்பிட்டார். ஜிஎஸ்டி வாயிலாக மத்திய அரசுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என அவர் தெரிவித்தார்.

இந்தியா, மற்ற நாடுகளை விட ஜிஎஸ்டி மூலம் சாதனை படைத்து வருவதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வர முடியாது என்றார். பெட்ரோலிய பொருட்கள், டாஸ்மார்க் உள்ளிட்ட துறைகளில் மூலம் தமிழக அரசுக்கு அதிக வருவாய் கிடைப்பதாக கூறிய அவர், இதனை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வந்தால், மக்களுக்கு தேவையான திட்டத்தை நிறைவேற்ற முடியாத சூழல் உருவாகும் என்று குறிப்பிட்டார்.