கப்பல் மூலம் ஆழ் கடலில் உள்ள தீவுகளில் மீனவர்கள் தேட ஏற்பாடு- பொன்.ராதாகிருஷ்ணன்!

572
tamilagam

குஜராத், மகாராஷ்டிராவில் தஞ்சைம் அடைந்திருக்கும், மீனவர்களுக்கு மத்திய அரசு சார்பில் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ஓகி புயலால் பாதிக்கப்பட்டு குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தஞ்சம் அடைந்துள்ள குமரி மாவட்ட மீனவர்களுக்கு, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மத்திய அரசு செய்து வருவதாக கூறினார். மேலும், 25 மீனவர்கள் தேர்வு செய்யப்பட்டு, கப்பல் மூலம், ஆழ்கடலில் உள்ள தீவிகளில் மீனவர்களை தேடுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.