திமுகவுக்கு பெரும் சவாலாக பாஜக அமையும் : பொன்.ராதாகிருஷ்ணன்

290

வரும் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி திமுகவுக்குப் பெரும் சவாலாக இருக்கும் என்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் மார்த்தாண்டத்தில் ரூ.180 கோடியில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரும்பாலான மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலத்திற்கான இரும்புத் தூண்கள் அமைக்கும் பணியை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தற்போது செயல்பட ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார். குடியரசுத் துணைத் தலைவருக்கான வேட்பாளரை பாஜக விரைவில் அறிவிக்கும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.