ராஜினாமா செய்வதினால் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்றால் ராஜினாமா செய்ய தயார் – பொன். ராதா கிருஷ்ணன்

660

ராஜினாமா செய்வதினால் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்றால் ராஜினாமா செய்ய தயார் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக மக்கள் பிரதிநிதிகள் ராஜினாமா செய்கிறோம் என மக்களை ஏமாற்றி வருவதாக குற்றம்சாட்டினார். மேலும் நவநீதகிருஷ்ணன் பரபரப்பை ஏற்படுத்தவே தற்கொலை செய்துகொள்வோம் என பேசியதாகவும், இதையெல்லாம் மக்கள் நம்ப மாட்டார்கள் எனவும் தெரிவித்தார். தான் ராஜினாமா செய்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்றால் ராஜினாமா செய்வதற்கும் தயார் என்றும் பொன். ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.