உள்ளாட்சி தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி தொடருமா? – பொன்.ராதா கிருஷ்ணன் பதில்

357

உள்ளாட்சி தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி தொடருமா? என்பது அந்தந்த கால சூழ்நிலையை பொறுத்து உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் வெற்றி பெற்ற திமுக எம்பி-க்கள் தங்கள் சொத்தை விற்றாவது, 6 மாதத்திற்குள், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார் . 37 திமுக எம்பி-க்களும் கர்நாடகம் சென்று, கூட்டணி கட்சி அரசிடம் தண்ணீர் கேட்டுப் பெற வேண்டும் என்று கூறிய பொன். ராதா கிருஷ்ணன், திமுக கூட்டணி மதவாத அரசியல் செய்து, பொய்யான வாக்குறுதிகளை சொல்லி வெற்றி பெற்றுள்ளதாகவும் விமர்சித்தார்.