தமிழகத்தில் கல்வித்துறை முன்னேற்றம் இல்லாமல் இருப்பதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

372

தமிழகத்தில் கல்வித்துறை முன்னேற்றம் இல்லாமல் இருப்பதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் பள்ளிவிளை சந்திப்பில் ரயிலில் வந்து இறங்கிய பொன்.ராதாகிருஷ்ணனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கன்னியாகுமரியிலிருந்து திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலை வாரத்திற்கு 3 நாள் இயக்கவும், குமரி முதல் அயோத்தியா வரை செல்ல புதிய ரயில் விடவும் மத்திய ரயில்வேதுறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழக கல்வித்துறையின் மீது முறையான அணுகுமுறை இல்லை என்று கூறிய பொன்.ராதாகிருஷ்ணன், அதனால் அத்துறை முன்னேற்றம் இல்லாமல் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.