தீவிரவாதிகளுக்கு அரசியல் கட்சிகள் துணைபோக கூடாது – அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன்

512

தீவிரவாதிகளுக்கு துணையான நடவடிக்கைகளில் எந்த அரசியல் கட்சியும் ஈடுபடக் கூடாது என மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கங்களைச் சேர்ந்த 5 பேரும், பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறினார். காங்கிரஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் இந்த தீவிரவாதிகளுக்கு துணைபோவதை கண்டித்த பொன். ராதா கிருஷ்ணன், ராஜீவ் காந்தியை கொன்றது போன்ற மற்றொரு சம்பவம் நடக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார். செம்மரம் தொடர்பாக தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏன் செல்கிறீர்கள்? என விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.