மோடியை மறந்தால் தமிழக மக்களுக்கு மன்னிப்பு கிடையாது – அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

250

காங்கிரஸ், தி.மு.க கூட்டணி 10 ஆண்டுகளில் செய்ய முடியாததை பிரதமர் மோடி ஒரே திட்டத்தின் மூலம் நிறைவேற்றிவிட்டதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளளார்.

மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், சென்னை முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை 4 வழிச்சாலை அமைக்கப்படும் என கூறினார். மேலும் பஸ்போர்ட் திட்டத்தை தமிழகத்தில் 4 இடங்களுக்கு கொண்டு வர உறுதி வழங்கியவர் பிரதமர் மோடி எனவும் பாராட்டினார். பொதுக்கூட்டத்தில் முன்னதாக பேசிய தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் ஸ்டாலினால் முதல்வராக முடியாது என்றும், செயல் தலைவராக மட்டுமே இருக்க முடியும் என்றும் விமர்சித்தார்.