பயங்கரவாதத்தை முழுமையாக வேரறுக்க வேண்டும் – மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

379

தமிழகத்தில் பரவியுள்ள பயங்கரவாதத்தை முழுமையாக வேரறுக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆரம்ப நிலையில் கவனிக்க வேண்டிய விஷயங்களை அ.தி.மு.க. அரசு கவனிக்க தவறிவிட்டதாக கூறினார். ஆட்சியில் இருப்பவர்கள் சரியாக செயல்படாத நேரத்தில் எதிர்க்கட்சி சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும், ஆனால் எதிர்க்கட்சியாக தி.மு.க. கடமையில் இருந்து தவறிவிட்டதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டுவிட்டவர்கள் யார் என்பதை மக்கள் அறிந்துகொண்டதாக கூறிய அவர், தமிழகத்தில் பயங்கரவாதம் முழுமையாக வேரறுக்கப்படவில்லை என்றால், மோசமான நிலையை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.