இறைவனை அவமானப்படுத்த ஸ்டாலினுக்கு உரிமை வழங்கியது யார்? – அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

127

இறைவனை அவமானப்படுத்த ஸ்டாலினுக்கு உரிமை வழங்கியது யார்? என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரிலேயே மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இறை நம்பிக்கை இல்லை என்றால் எதற்காக ஸ்டாலின் கோயிலுக்கு செல்ல வேண்டும்? என வினவிய பொன்.ராதாகிருஷ்ணன், இறைவனை அவமானப்படுத்த ஸ்டாலினுக்கு உரிமை வழங்கியது யார்? என்றும் கேள்வி எழுப்பினார். இறை நம்பிக்கை இல்ல என்றால் நம்பிக்கை உள்ளவர்களின் மனதை புண்படுத்தக்கூடாது எனவும் அவர் கூறினார்.