ஆட்சி செய்பவர்கள் ஒழுங்காக இருந்தால் அனைத்தும் நல்லபடியாக இருக்கும் – அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

109

தமிழகத்தில் ஆட்சி செய்பவர்கள் ஒழுங்காக இருந்தால், அனைத்தும் நல்லபடியாக இருக்கும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் வழிபட்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள் என கூறுவதற்கு தான் யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார். ஆட்சி செய்பவர்கள் ஒழுங்காக இருந்தால் அனைத்தும் நல்லபடியாக இருக்கும் என்றும் குற்றம் சாட்டினார்.