தமிழகத்தில் மேலும் 4 இடங்களில் விமான சேவை தொடங்கப்படும் – பொன்.ராதாகிருஷ்ணன்

729

மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால்தான் மக்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் சென்னை இடையிலான விமான சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் பொன்ராதகிருஷ்ணன், மாநில அமைச்சர்கள் மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்திற்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான போக்குவரத்து திட்டங்கள் மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இதைதொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,10 கோடி ரூபாய் செலவில் சென்னை சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்கப்படும் என உறுதியளித்தார். மக்களின் நலனுக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவது எதிர்கட்சிகளுக்கு பிடிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.