எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் குளச்சல் துறைமுகம் கொண்டுவரப்படும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

346

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் குளச்சல் துறைமுகம் கொண்டுவரப்படும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புரசைவாக்கத்தில் கைத்தறி அமைச்சகத்தின் சார்பில் வண்ணமிகு சுதந்திர தினம் என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். சுதந்திர தின நல்வாழ்த்துகளை குறிக்கும் வசனங்களை அங்கு வைப்பட்டிருந்த துணியில் விழாவில் கலந்து கொண்ட அனைவரும் எழுதினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷணன், குளச்சல் துறைமுகம் பல அரசியல் ஆதாயங்களுக்காக தடுக்கப்பட்டு வருவதாகவும், நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக அமையும் எனவும் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


பாலாறு, காவிரி மற்றும் முல்லை பெரியாறு அணைகளின் குறுக்கே புதிய அணைகள் கட்டுவதையோ, தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிப்பதையோ ஏற்றுக்கொள்ள முடியாது

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலப் பணிகளை அவர் நேரில் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொன். ராதாகிருஷ்ணன், கிழக்கு கடற்கரை சாலை அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார். மேலும், தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தி இருப்பதாக அவர் தெரிவித்தார். பாலாறு, காவிரி, முல்லை பெரியாறில் தமிழக நலனுக்கு எதிராக அண்டை மாநிலங்களை செயல்படுவதை ஒருகாலும் ஏற்க முடியாது என்று பொன். ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார். ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு பாலம் அமைக்க வேண்டும் என்பது இந்தியாவின் விருப்பம் என்று கூறிய பொன் ராதாகிருஷ்ணன், இதை ஏற்பது இலங்கை அரசின் விருப்பம் என்று தெரிவித்தார். கேரள மாநிலம் காசர்கோடு முதல் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணி ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.